Showing posts with label India. Show all posts
தனது முகநுாலில் வந்த கீழ்த்தரமான விமர்சனங்களை நீக்காமல் அப்படியே விட்டுவிடுமாறு திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்ததாக கனிமொழி கூறினார்.
ஆட்சி மாற்றத்திற்கு சமூக வலைத்தளங்கள் பங்களிப்பு என்பது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி, கலந்துகொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, “தமிழக மக்கள் இன்று சுயமரியாதையோடு வாழ பெரியாரும் திராவிட இயக்கமும்தான் காரணம். ஆனால் திராவிட கட்சிகளால்தான் தமிழகம் சீரழிந்துவிட்டது என்று சமூக வலைத் தளங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுகின்றன.
இது தி.மு.க வை அழிக்க நினைப்பவர்கள் செய்யும் பிரச்சாரம். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில்தான் அதிக அளவில் தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டன. கூகுள் செய்து பார்த்தாலே இது தெரிந்து விடும்.
ஆனால் இன்று அதிமுக ஆட்சியில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இன்றைக்கு தமிழகம் பீகாரை விட மோசமான மாநிலமாகிவிட்டது. இதுபோன்ற உண்மைகளை சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.
மழை வந்தாலும், வெயில் வந்தாலும் தி.மு.க மீதுதான் பழி சுமத்தப்படுகின்றது. அதிமுக செய்யும் தவறுகளில் நம்மையும் இழுத்து விடுகிறார்கள். அதில் இருக்கும் உண்மைகளை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். இட ஒதுக்கீட்டை தி.மு.க கொண்டு வந்தது.
ஒடுக்கப்பட்டவர்களும் இன்று உயர் பதவியில் இருக்க காரணம் திமுகதான் என கடந்த கால நிகழ்வுகளை வாக்காளர்களுக்கு உணர்த்த வேண்டும். பெண்கள் வாக்குகளை குறி வைத்துதான் மதுவிலக்கு கொள்கையை தி.மு.க அறிவித்துள்ளது என்று பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். பெண்களுக்கு சமமாக ஆண்களும் இருக்கிறார்கள். அவர்கள் வாக்குகளை விட்டு விடலாமா?
இன்று குடும்பங்கள் சீரழியும் நிலை இந்த மதுவால் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. அதனால்தான் கலைஞர் மதுவிலக்கை அறிவித்துள்ளார். மதுவிலக்கை அமல்படுத்தாததற்கு காரணம் தமிழகத்திற்கு நிதிவருவாய் குறைந்துவிடும் என்பதல்ல. மதுபான நிறுவனமான மிடாசுக்கு வருமானம் இல்லாமல் போய் விடும் என்பதற்காக.
ஜெயலலிதா நல்லவர், அவரைச் சுற்றியுள்ளவர்கள்தான் கெட்டவர்கள் என்றும், ‘அம்மா’ கற்பூரம் போன்றவர் என்றும் பேசுகிறார்கள். ஜெயலலிதா நனைந்து போன கற்பூரம். அதிகாரம் அனைத்தும் ஜெயலலிதா கையில்தான் உள்ளது.
அமைச்சர்கள் கெட்டவர்கள், சசிகலா கெட்டவர், ஆனால் ஜெயலலிதா மட்டும் நல்லவர் என்ற பிரச்சாரத்தை உடைத்து மக்களுக்கு உண்மையை புரிய வைக்க வேண்டும்.
தி.மு.க ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தன்னை மாற்றி கட்டமைத்து வந்துள்ளது. முதலில் நாடகங்கள், பின்னர் திரைப்படங்கள், பத்திரிக்கைகள் மூலமாக மக்களிடம் தொடர்பு கொண்டோம். தற்போது இணையதளம் மூலமாக நமது பணியை செய்து வருகிறோம்.
தலைவர் முகநூலில் பக்கம் தொடங்கிய பொது பலபேர் அதில் பதிவுகள் செய்தார்கள். சிலர் தகாத வார்த்தைகளை கீழ்த்தரமான பதிவுகளை செய்தார்கள். அப்போது அந்த பதிவுகளை நீக்கி விடலாமா என்று அவரிடம் கேட்டபோது அதனை முழுமையாக மறுத்து விட்டார்.
‘விமர்சனங்கள் வந்தால் நீக்கவேண்டாம். அது அப்படியே இருக்கட்டும்’ என்று கூறிய பண்புடையவர் கருணாநிதி” என்றார்.
நிகழ்ச்சியில் பல மாவட்டங்களில் இருந்து வலைதள பயனாளிகள் கலந்து கொண்டனர். கனிமொழி பேசிய பின்னர் சமூக வலைதளங்களில் தி.மு.க எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கலந்துரையாடல் நடைபெற்றது. வெளி நாடுகளில் வேலை செய்யும் தி.மு.க தொண்டர்களிடம் ஸ்கைப் மூலமாக கனிமொழி பேசினார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாட்கள் பயணமாக நாளை (சனிக்கிழமை) மாலைத்தீவுக்கு செல்கிறார்.
அங்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இரு நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்கிவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில்,
கடந்த 2000மாவது ஆண்டு இரு நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது.
தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா, மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் துன்யா மவுமூன் ஆகியோர் தலைமையில் நடக்கிறது.
தனது பயணத்தின் போது சுஷ்மா, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனையும் சந்திக்கிறார்.
இதன்போது அவருடன் பொருளாதாரம், பாதுகாப்பு, வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.
இதனையடுத்து, இந்தியா மாலத்தீவு இடையிலான உறவில் இரு நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். மாலத்தீன் ஜனநாயகம் பாதுகாக்கப்பட இந்தியா தொடர்ந்து தனது ஆதரவை அளிக்கும்.
மேலும் மாலத்தீவில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் உருவாக வேண்டும் என இந்தியா விரும்புகிறது என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் சுற்றில் அர்லாந்து வெற்றி பெற்றது.
ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் போட்டியின் டீ அணிப் பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜேர்மனி அணிகள் மோதின.
போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் எதனையும் போடமுடியவில்லை, எனினும் 70 ஆவது நிமிடத்தில் அயர்லாந்து கோல் ஒன்றைப் போட்டு வெற்றியை தனதாக்கியது.
ஐரோப்பிய கால்பந்தாட்ட தகுதிகாண் போட்டிகள் 9 பிரிவுகளாக நடைபெறுகின்றன.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ இன்று பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜராகினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ரக்னா லங்கா நிறுவனத்தின் ஊழியர்களைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் சாட்சியம் பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இன்று அழைக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்தார்.
ரக்னா லங்கா நிறுவனத்தின் கணக்காய்வாளர்கள் இருவரிடம் சுமார் 3 மணித்தியாலங்கள் வரை விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வீதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய சகல தரப்பினர்கள் மற்றும் நிறுவன பிரதிநிதிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
வீதி நெரிசல் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஆணைக்குழுவின் சட்ட செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
வாகன நெரிசல் காரணமாக தொழில் நிமித்தம் செல்கின்றவர்கள் மற்றும் பொது மக்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன் தேசிய வருமானத்தில் பல மில்லியன் ரூபா விரையம் ஏற்படுவதாக ஆணைக்குழுவின் சட்ட செயலாளர் தெரிவித்தார்.
பொலிஸ் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரை அழைத்து போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான தேசிய திட்டமொன்றை தயாரிப்பதன் முக்கியத்துவம் குறித்து ஆராய்ந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளக்கூடிய குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்து எதிர்காலத்தில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையில்லாப் பட்டதாரிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (09) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கிழக்குமாகாண முதலமைச்சர் அங்கு விஜயம் செய்திருந்தார்.
சுமார் 300 இற்கும் அதிகமான பட்டதாரிகள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர்.
இதன் போது 10 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கிழக்குமாகாண முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உட்பட 4 ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, அரச சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள்ஆ ணைக்குழு ஆகியவற்றிற்கான உறுப்பினர்கள் இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு பேரவை இன்று (09) கூடியபோது இந்த சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இந்த பெயர் விபரங்களை இன்றைய தினத்திற்குள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தகுதியான உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான பொறுப்பு அரசியலமைப்பு பேரவைக்கு வழங்கப்பட்டிருந்தது.
அடுத்த மாதம் 4 ஆம் திகதி அரசியலமைப்பு பேரவை மீண்டும் கூடவுள்ளது.
துனிசியாவின் தேசிய பேச்சுவார்த்தை குழுவிற்கு (Tunisian National Dialogue Quartet) 2015ஆம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
துனிசியாவின் பன்முக ஜனநாயகக் கட்டமைப்பிற்கு பாரிய பங்களிப்பினைச் செய்தமைக்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு அமைப்புகளை உள்ளடக்கிய இந்த பேச்சுவார்த்தைக் குழு துனிசியாவில் அரபு எழுச்சி தொடங்கிய நிலையில் அங்கு ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் ஏற்படப் பாடுபட்டது.

2015 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான ஸ்வெட்லானாவிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படைப்பிலக்கியத் துறையில் உலகளாவிய சாதனை படைத்ததற்காக, ஐரோப்பிய நாடான பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஸ்வெட்லானா அலெக்ஸீவிச்சுக்கு (வயது 67) இந்தப் பரிசு வழங்கப்படவுள்ளது.
இதை ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் நோபல் பரிசு குழு நேற்று (08) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
‘‘நமது காலத்தின் பாடுகள் மற்றும் துணிச்சலுக்கான நினைவுச்சின்னமாக இவரது பல குரல் கொண்ட எழுத்துக்கள் ஒலித்துள்ளன’’ என நோபல் விருதுக்குழு தெரிவித்துள்ளது.
இவர் கடந்த 40 ஆண்டுகளாக சோவியத் மக்கள் மற்றும் சோவியத்திற்கு பிந்தைய காலகட்ட மக்களின் வாழ்க்கை முறையை ஆராய்ந்து பதிவு செய்து வந்துள்ளார்.
உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலை விபத்து துயரம், ஆப்கானிஸ்தான்– சோவியத் போர் போன்றவற்றின் இவரது பதிவுகளை உதாரணமாகக் கூறலாம்.
குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பல்லாயிரக்கணக்கானோரை பேட்டி கண்டு, நாம் அறிந்திராத நிகழ்வுகளை தந்திருக்கிறார்.
அதேவேளை, இவர் உணர்வுகளின் வரலாற்றையும், ஆன்மாவின் சரித்திரத்தையும் தந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் நோபல் பரிசினை வென்ற 14 ஆவது பெண் என்ற சிறப்பையும் இவர் பெறுகின்றார்.
முந்தல் பொலிஸ் பிரிவின் மககும்புக்கடவல பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் நேற்று (08) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 47 வயதான ரத்மல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முந்தல் பொலிஸார்
நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.









